நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தனித்துவத்துடன் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்றவர் நடிகை சமந்தா, குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார்.

இவர் இப்போது யசோதா என்கிற திரைப்படத்தில் நடித்துவருகிறார், அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் முடிவடைந்துவிட்ட நிலையில் இதற்கு சிகிச்சை பெற்ற படி டப்பிங் பேசி வரும் புகைப்படத்தை பகிர்ந்து தான் மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நோய் தசைபகுதிகளை பாதிக்கும் அரிய நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டாள் தோள் பட்டை, இடுப்பு, தொடை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும், தசைபிடிப்பு ஏற்படும், அதீத சோர்வாக உணர்வார்கள், அன்றாட பணிசெய்தல் கூட கடினமாகிடும். இதயம் நுரையீரல் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இந்நோய் முழுவதுமாக குணப்படத்த இயலாத தீர்க்க முடியாத நோயாகும், பிசியோதெரபி மூலம் நிவாரணம் பெறலாம் மருத்துவ உதவியுடன் இழந்த பலத்தை பெறலாம் மேலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தற்காத்துக்கொள்ளலாம், அடிக்கடி மருத்துவ சோதனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே இயல்பாக வாழ இயலும்.

https://www.instagram.com/p/CkSvgOOLV-Z/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *