நடிகர் மனோபாலா காலமானார்

நடிகர் மனோபாலா காலமானார்

image 2

நடிகரும் இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவினால் காலமானார். கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா மரணமடைந்தது பல திரை உலக பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவரது பயணித்த திரை உலக பிரபலங்கள் கூறியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மனோபாலா. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஒரு காலத்தில் பரபரப்பாக காணப்பட்ட பிஸி இயக்குநரான இவர் நகைச்சுவை நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

image 1

நகைச்சுவை நடிகர் மனோபாலாவிற்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார். இவர் தளபதி 67 ஆவது படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக அவர் தளபதி 67 படத்திற்கான அப்டேட்டை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், “தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன், அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில்.. முதல் நாளே.. தூள்..” என பதிவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *