நித்திரையில் இருக்கும் தமிழா

புத்தாண்டு தை1 ஆ சித்திரை1 ஆ

நித்திரையில் இருக்கும் தமிழா:

தமிழன் : இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

திராவிடன் : தை தானேடா தமிழ் புத்தாண்டு? நீ ஏன் சித்திரை புத்தாண்டுனு சொல்ற?? புத்தி கெட்டுபோச்சா?

தமிழன் : தை புத்தாண்டா?? உனக்கு அப்படி யாரு சொன்னது?? 1972 ல கருணாநிதி அரசாணை வெளியிடுறதுக்கு முன்னாடி தையை புத்தாண்டாக கொண்டாடினார்கள் என்பதற்கு எதாவது ஒரு சான்று கொடுடா பார்க்கலாம்.

திராவிடன் : சித்திரை ஆரிய புத்தாண்டுடா. தமிழர்களுக்கு தைதான் புத்தாண்டு.

தமிழன் : உனக்கு அப்படி யாரு சொன்னது? இதை எங்கே படித்தாய்? எதாவது ஆதாரம் குடு.

திராவிடன் : பாரதிதாசன் கவிதை படிச்சிருக்கியா இல்லியா?

தமிழன் : ஓ…! கவிதையா? நீ கூறும் நித்திரையில் இருக்கும் தமிழா என்ற கவிதையை எழுதிய பாரதிதாசனின் திங்கள் பன்னிரண்டு என்கிற கவிதையை படிச்சிருக்கியா???

” சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி
ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம் – இவை ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் ”

இந்த கவிதையையும் பாரதிதாசன் தை என்று ஆரம்பித்திருக்க வேண்டியது தானே ? ஏன் சித்திரையிலிருந்து ஆரம்பிக்கிறார் ? அப்பொழுது நித்திரையில் இருந்தது யார் ? அதோடு பாரதிதாசன் வாழ்ந்த அதே காலத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்று ஏன் பாடினார்?

திராவிடன் : என்கிட்டயாவது பாரதிதாசனின் கவிதை இருக்கு. உன்கிட்ட என்ன இருக்கு ஆதாரத்துக்கு???

தமிழன் : அதுதான் இராமலிங்கம் பிள்ளை பாடிய வாழ்த்துப்பாடலில் சித்திரையை புத்தாண்டாக பாடியுள்ளாரே?

நித்திரையில் இருக்கும் தமிழா

திராவிடன் : இதுக்கும் அதுக்கும் சரியா போச்சு. 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி எதாச்சும் ஆதாரம் இருக்கா?

தமிழன் : இருந்தா மட்டும் ஏத்துக்கிடுவியா என்ன???

திராவிடன் : இருந்தா காட்டு. ஏத்துக்கிறேனா இல்லையானு அப்புறம் பாத்துக்கலாம்.

தமிழன் : (அகத்தியர் பன்னீராயிரம்)

“மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு
மேலானா யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருச புருசன் அவதரிப்பானென்றே
பரிவுடன் உலகிற்கு நீசாற்றே”

விளக்கம் : மேட ராசியில் அசுவினி முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் வருசபுருஷன் அவதரிப்பான். அதாவது மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளே சித்திரை 1. இதையே அகத்தியர் வருஷ புருசன் என்கிறார். உனக்கு புரியுறமாதிரி சொல்லணும்னா சித்திரையில் புத்தாண்டு பிறக்கும்.

இந்நூலின் காலம் : 12 ஆம் நூற்றாண்டு.

உன்கிட்ட 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு தையை புத்தாண்டாகவோ வருடத்தின் முதல் மாதமாகவோ கொண்டாடியதற்கு சான்றுகள் உண்டா???

திராவிடன் : 12 ஆம் நூற்றாண்டா 😳😳😳

தமிழன் : ஆம் இன்றிலிருந்து சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர். உன்னிடம் எதாவது இருக்கா?

திராவிடன் : 😞🚶🚶🚶

தமிழன் : டேய் நில்லுடா.

திராவிடன் : 🏃🏃🏃🏃

தமிழன் : டேய் ஓடாதடா. நான் வேணும்னா தைதான் புத்தாண்டுனு ஒத்துக்குறேன்டா. அடுத்து சங்க இலக்கியங்களில் தைதான் புத்தாண்டு என்பதற்கு சான்றுகள் உள்ளதா என்று பார்க்கலாமா?

திராவிடன் : 750 ஆண்டுகளுக்குள்ள கேட்டதுக்கே எங்க போறதுனு தெரியல. இதுல 2000 ஆண்டா? ஆள விடுடா சாமி நான் எங்க நாட்டுக்கே போயிடுறேன்🏃🏃.

இங்ஙனம் – பா இந்துவன்.

Also read : இந்துக்கள் சூத்திரர்களா

Need website for 8k visit www.octamact.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *