தஞ்சை பெரிய கோவில் அதிகாரவர்க மையமா?2. பெரிய கோவில் வருமானம் யாருக்கு சென்றது?

ஐப்பசி சதயம்…

3.11.2022

பேரரசர் பிறந்தநாள்..

தஞ்சை பெரிய கோவில்

இராஜராஜன் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று..

அவர் கட்டிய தஞ்சை பெரியகோவில் அதிகார வர்க்கத்தின் மையமாக இருந்தது. அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டது. ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. கோவில் அனைத்துச் சொத்துக்களையும் பார்ப்பனர்களே அனுபவித்தனர்.

இவையனைத்தும் பொய்யான, யூகமான, வன்மமானக் குற்றச்சாட்டுகள்..

அனைத்து விபரங்களும் கோவிலில் கல்வெட்டு சாசனங்களாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோவிலின் மொத்த வருமானமும் ஊதியமாக, நிவந்தமாக பொதுமக்களுக்கே வழங்கப்பட்டது.

பெரியகோவிலின் வருமானம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்.

அதன் மூலம் வருமானமாகப் பெறப்பட்ட நெல்.

தானமாகப் பெறப்பட்ட காசு மற்றும் பொன் விபரங்கள்.

விளக்கெரிக்க தானமாக வழங்கப்பட்ட ஆடு, பசு, எருமை, பொன், காசு.

அரசர் மற்றும் அதிகாரிகள் வழங்கிய செப்புத்திருமேனிகள்.

இறைவனுக்கு தானமாக வழங்கப்பட்ட ஆபரணங்கள், பாத்திரகள் மற்ற பொருட்கள்.

கோவிலுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு.? அதன் மூலம் வருவாயாக வந்த நெல் எவ்வளவு.? வருமானமாக வந்த நெல் எவ்வாறு செலவு செய்யப்பட்டது.?

சுருக்கமாகப் பார்ப்போம்.

பெரியகோவிலின் மேற்குப்புற மற்றும் வடபுறம்..சுவற்றில் காணப்படும் நீண்ட கல்வெட்டு.

(S.ii.vol 2.no 4 ,5 , 92 ல்) கல்வெட்டுகளில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை பட்டியலிடுகிறது.

அருமொழிதேவ வளநாட்டு இங்கனாட்டு பாலையூர் என்னும் ஊரிலிருந்து பெரியகோவிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்திலிருந்து ஒரு ஆண்டிற்கு வருவாயாகக் கிடைத்த நெல் ..

12 530 கலம் 2 தூணி 1 குறுணி 1 நாழி.

இராஜேந்திரசிங்க வளநாடு மருத்துவக்குடி என்னும் ஊரிலிருந்து வருவாயாகக் கிடைக்கப்பட்ட நெல்

68987 கலம் 2 தூணி 2 குறுணி 6 நாழி.

ராஜேந்திரசிங்க வளநாட்டு ஊரிலிருந்து கிடைத்த நெல்

51390 கலம் 2 தூணி 1 பதக்கு 1 குறுணி 7 நாழி 1 உரி.

இன்னும் சில ஊர்களின் வருவாயும் சேர்த்து

ஒட்டுமொத்த வருவாயாக..

ஆண்டுக்கு..

1,15,000 கலம் நெல்..

300 கழஞ்சு பொன்

2000 காசுகள்.

இந்த ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் கலம் நெல் எவ்வாறு செலவிடப்பட்டது.?

கோவிலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியமாகவும், நிவந்தமாகவும் வழங்கப்பட்டது.

பட்டியலைப் பார்ப்போம்.

கோவிலின் வெளிப்புறச்சுவற்றில் வடமேற்குப்பகுதியில் காணப்படும் நீண்ட கல்வெட்டில் காணப்படும் பணியாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியவிகிதமும்..

கணக்கெழுதுவான்

6 × 200= 1200 கலம் நெல்.( ஆறு பேர்க்கு வருடத்திற்கு 200 கலம் நெல் ஊதியம்)

கீழ்க்கணக்கு.

12 × 75 = 900 கலம்.

தளிச்சேரிப் பெண்டுகள்..

400 × 100 = 40000 கலம்

நட்டவும் செய்வான்

6 × 200 = 1200 கலம் நெல்.

கொட்டாட்டுப் பாட்டு

5 × 150 = 750

கானபாடி.

5 × 150 = 750

வங்கியம்.

2× 150 = 300.

பாடவியம் .

4 ×200= 800

உடுக்கை வாசிப்பான்.

2 × 150=300

வீனை வாசிப்பான்

2 × 150 =300

தமிழ் பாடுவான்

4 ×150 = 600

ஆரியம் பாடுவான்

3 × 150 =450

கொட்டி மத்தளம்.

2 ×100= 200

முத்திரைச் சங்கு.

1 ×100 =100

பக்கவாத்தியம்

5 ×75= 375

காந்தர்வன்

75 ×75= 4125

மத்தளம் இசைப்பவர்கள்.

60 × 75 = 4500

திருவாய்க்கேள்வி

7 ×100 = 700

நாயகம் செய்வான்

2× 200= 400

கணக்கு.

4× 200 =800

கீழ்க்கணக்கு

8× 150 =1200

உவச்சர்

11 × 50 =550

சகடை கொட்டிகள்

11 × 50 = 550

திருப்பள்ளித் தொங்கல் பிடிக்கும் ஆளுக்கு உள்படுவான்

1 ×100= 100

ஆள்.

10× 50= 500

விளக்குடையார்களுக்கு உள்படுவான்

1 × 100 = 100

ஆள்

7 ×50 =350

நீர்தெளியான்

4 × 50 = 200

சன்னாளியன்

3 ×75 = 225

திருமடைப்பள்ளிக் குசவருக்கு உள்படுவான்

1×100 = 100

ஆள்.

10× 50 =500

வண்ணத்தார்

2 × 100= 200

காவிதிமை செய்வான்

2 × 50 =100

நாவிதம் செய்வான்

2 × 50 = 100

திரு ( கணி)

1 ×100 =100

ஷை„ கீழ் ஆள்

2× 50 = 100

கோலினிமை செய்வார்

2 × 150= 300

அம்பட்டன்

1× 100= 100

தய்யான்

2 × 100 = 200

ரத்தினத் தய்யான்

1× 150 =150

கன்னான்.

1 ×100 = 100

தச்சு ஆசாரியம்

1 ×150 =150

மேற்படி ஆள்

2× 150 =300

தச்சு

2× 75= 150

பாணன்

4 ×150= 600

கண்காணித்தட்டன்

1× 100= 100

திருமெய்க்காப்பு

118× 100= 11800

பண்டாரம் செய்வார்.

( விபரங்கள் சிதைவு)

திருபரிகாரம் செய்வான்

166 நாள் 1 பதக்கு

நிலையாய் தீட்சித்தார்

10 நாள் 3 குறுணி.

மொத்தம் 88, 750 கலம்

நெல் ஊதியமாக வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் தேவராத் திருப்பதியம் பாடுவோர் 48 பேரும். , உடுக்கை வாசிப்போன் ஒருவர், மத்தளம் கொட்டுபவர் ஒருவர் என்று 50 பேர்களுக்கு நாளொன்றுக்கு முக்குறுனி நெல் ஊதியமாக ஆண்டுக்கு 1125 கலம் நெல் வழங்கப்பட்டது.

(Vol 2 no 65)

கோவில் ஊழியத்திற்காக பரிசாரகர் பண்டாரி , மற்றும் கணக்கர், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களையும் சேர்த்து..

நிவந்தமாக, ஊதியமாக லழங்கப்பட்ட மொத்த நெல்லின் அளவு..

98, 880 கலம்.

வருமானமாக வந்த மொத்த நெல்லின் அளவு 1 ,15 000 கலம்.

சிலரது ஊதிய விபரங்கள் சிதைவுற்றுள்ளது..

ஆகவே…

பெரியகோவில் வருமானம் முழுவதும் பொதுமக்களுக்கே ஊதியமாக வழங்கப்பட்டது.

கோவிலானது அதிகார வர்க்கத்தினரின் மையமாக இருக்கவில்லை..

பொதுமக்களின் வாழ்வாதார மையமாக இருந்தது என்பதுதான் கல்வெட்டு கூறும் வரலாற்று உண்மை.

தஞ்சைப் பெரியகோவிலின் ஒட்டுமொத்த வரவு செலவு கணக்குகளை ஆயிரம் வருடங்கள் கடந்து இன்றும் நாம் சரிபார்த்துக்

கொள்ளலாம்…

இதுதான்

இராஜராஜர்..

அன்புடன்.

மா.மாரிராஜன்.

( Refrence..

தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 2

இராஜராஜன் நூல்..

சா.கனேசன்.

ஓவியம்..

திரு.விஷ்ணுராம்.)

www.octamact.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *