ஏகமாதா பகுபிதா என்ற மந்திரம் உள்ளதா அதில் கெட்ட வார்த்தை உள்ளதா- வாருங்கள் பார்ப்போம்

“ஏகமாதா பகுபிதா சச் சூத்ராய நமஹா” இதுதான் இவர்கள் சொல்லும் மந்திரம் அதாவது இதற்கு பொருளாக (ஏகமாதா ) ஒரு தாய்க்கும் (பகுபிதா) பலதகப்பனுக்கும் பிறந்த,(சச்) உண்மையான, (சூத்ராய) வைப்பாட்டி மகன் (நமஹா) வணங்குகிறேன் என்று தமிழில் இந்த ஸ்லோகத்தை மொழிபெயர்த்து முகநூல் முழுவதும் சுற்றவிட்டுக்கொண்டிருக்கின்றனர்…! இந்த மந்திரம் எங்கே உபயோகிக்கப்படுகிறது என்பதற்கு மூன்று விதமாக பதில் சொல்கின்றனர். 1. சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்பேது. 2. பூஜை செய்ய வரும் பக்தர்களை நோக்கி 3. தர்பணம் கொடுப்போரை வைத்து சொல்ல வைக்கிறார்கள். (இதில் எதுவென அவர்களிடமே தெளிவு இல்லை.) முதலில் இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள மூலநூல் எதுவென தேடுதலானேன். நான் தேடி எனக்கு எங்குமே கிடைக்காததால் நான் அறிந்த சில வடமொழி அறிஞர்களிடம் இந்த ஸ்லோகத்தை கூறி இது எந்த நூலில் உள்ளது என்று கேட்டேன். முகநூல் வாசமே அறியாத அவ்வறிஞர்கள் என்னையும் எனது கேள்வியையும் கண்டு நகைத்தார்கள். ஏன் என்று வினவியபோது இந்த ஸ்லோகம் கோர்வையாக இல்லை எனவும் இதற்கு எதாவது பொருள் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டனர். அதாவது இந்த ஸ்லோகத்தை கோர்வையாக படித்தால் பொருளற்றது என்பது அவர்களின் வாதம். அதோடு இச்சுலோகம் நாங்கள் அறிந்த எந்த இந்துதர்மத்தின் எந்த அதிகாரப்பூர்வ நூலிலும் இல்லை என்று ஆணித்தனமாக கூறிவிட்டனர்…! அவர்களிடம் கேட்டதோடு மட்டும் நில்லாமல் எதிர் கருத்துடைய பலரிடமும், இந்த ஸ்லோகத்தை தூக்கி சுமக்கும் அன்பர்களிடமும் இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள மூலநூல் எதுவென வினவியபோது அவர்களின் பதில் எங்களுக்கு தெரியாது என்பதாகவே இருந்தது. இறுதியில் இதை முகநூலிலே கேட்டுவிடுவோம் என்று இந்த பதிவை எழுதுகிறேன்…! (அதாவது உங்களில் யாருக்கேனும் துணிவிருந்தால் இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள அதாவது இந்துதர்மத்தின் அதிகாரப்பூர்வ எதாவது ஒரு நூலில் இடம்பெற்றிருந்தால் இந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்நூலின் பெயரோடு அப்பகுதியை SS எடுத்து பதியவும். இப்பதிவானது இந்த ஸ்லோகத்தை தூக்கி சுமக்கும் #புகுத்தறிவாளர்களுக்கு ஓப்பண் சேலஞ்ச்.

) இருப்பினும் சொற்களின் மூலத்தை கொண்டு இதற்கான பொருளை எழுத முற்பட்டால், ஏக மாதா : ஒரு தாயும் பகு பிதா : பக்குவப்பட்ட தந்தைக்கும் சச் : சத்தியாமான , உண்மையான சூத்திரன் : உழைப்பில் உயர்ந்தவன் இதன் பொருள் : “ஒரு தாய்க்கும், பக்குவப்பட்ட தந்தைக்கும், உண்மையாக பிறந்தவரை வணங்குகிறேன்இந்த டுபாக்கூர் ஸ்லோகத்திலுள்ள “பகு” என்ற சொல்லுக்கு தமிழில் பிரித்தல், பங்கிடுதல், வகுத்தல் என்பதுபோன்ற பல பொருள்கள் வரும். ஆனால் சமஸ்கிருதத்தில் ‘ பகு ‘ என்ற சொல்லுக்கு பக்குவம் என்ற பொருளும் உண்டு என்று விளக்கத்தை கூறி கடந்து செல்லவும் முடியாது. ஏனெனில் இல்லாத ஒரு ஸ்லோகத்திற்கு இருப்பதாக எண்ணி அதற்கு உயிரூட்டமளித்தால் அது இருப்பதாகவே நம்பப்பட்டு ஒரு பொய்யான வரலாற்றை எழுதிவிடுவர்…! ஆகவே இந்த ஸ்லோகம் எந்த நூலில் உள்ளது என்ற கேள்வியோடு இந்த ஸ்லோகத்தை தூக்கி சுமப்பவர்களுக்கு சவாலும் விடுகிறேன். உங்களால் முடிந்தால் இந்த ஸ்லோகம் எந்த இந்துமத அதிகாரப்பூர்வ நூலில் உள்ளது??? அந்த மூலநூலின் பகுதியை SS எடுத்து இந்த பதிவின் பின்னூட்டத்தில் பதியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *