இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து

[ad_1]

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து சர்வதேச மல்யுத்த சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட 15 பதவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்பி., பிரிஜ் பூஷண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடியதால் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்நிலையில், 45 நாட்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மே மாதம் 30ஆம் தேதி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதிய சர்வதேச மல்யுத்த சம்மேளனம், மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இதற்கிடையே, ஜூலை 4 மற்றும் ஜூலை 11 என தேர்தலை நடத்தும் தேதி தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 12-க்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில், வரும் 28ஆம் தேதி வரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை சர்வதேச மல்யுத்த சம்மேளனம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள், இந்தியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *