கூடுதல் விளக்கம் கேட்கிறார் ஆளுநர் ரவி- ஆன்லைன் ரம்மி தடை மசோதா

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள், ஏராளமான உயிர்களை காவு வாங்கி உள்ளது. இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்வது தொடர்பாக தமிழக சட்டசபையில் சட்டமசேதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ஒப்புதல் அளிக்கவில்லை. பின்னர், சட்ட மசோதா தொடர்பாக சில சந்தேகங்களை ஆளுநர் ஆர்என் ரவி கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு அரசு பதிலளித்தது. ஆனாலும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்தினார். ஆளுநரின் இந்த காலதாமதத்தை சுட்டிக்காட்டி பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆன்லைன் ரம்மியால் இதுவரை 44 பேர் இறந்துள்ள நிலையில், தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். எனினும் ஆளுநர் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ரவி. 4 மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி, அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

image 8

Need website under 10k please visit www.octamact.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *