முதலமைச்சர் நடவடிக்கை

பொங்கல் பரிசு ரூ.1,000: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசு ரூ.1,000: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடின. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி, சர்க்கரை, நெய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாயை தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இந்தத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த அரசு திட்டமிட்டது.
பொங்கல் பரிசு: ரேஷன் கடைகளில் ரூ.1,000 – குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி
ஆனால், ‘வங்கியில் வழங்கினால், கிராமங்களில் வசிப்போர் பணம் எடுக்க சிரமப்படுவர்; ரொக்கமாக கொடுத்தால் தான், அரசுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்’ என, ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால், வங்கிக் கணக்கு இல்லாத கார்டுதாரர்களுக்கு, வங்கிக் கணக்கு துவக்கும் பணி மும்முரமாக நடந்தாலும், வரும் பொங்கல் பண்டிகைக்கு மட்டும், ரொக்கப் பணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பால், ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

primonkz digitaldews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *