kongu dheeran chinnamalai

Dheeran Chinnamalai History : தீரன் சின்னமலை Apirl 17

ஏப்ரல் 17, 1756 இல், தென்னிந்தியாவில் உள்ள திருப்பூர் மாவட்டம் தீரன் சின்னமலை பிறந்தார். ரத்தினசாமி மற்றும் பெரியத்தா ஆகியோரின் மகனான இவர் தீர்க்கதரிசி என்று அறியப்பட்டார். ஒரு நாள், மைசூர் அரசுக்குச் சென்று கொண்டிருந்த வரிப் பணத்தைப் பறித்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழைகளுக்குக் கொடுத்தார் தீர்க்கதரிசி

Dheeran Chinnamalai
Dheeran Chinnamalai

மைசூருக்கு வரி பணத்தை வசூலித்து செல்லும் அரச பிரதிநிதியிடம், வரிப்பணத்தை சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு சின்னமலை பறித்து விட்டதாக போய் உன் அரசிடம் சொல் என்று மிரட்டி அனுப்பினார். அன்றிலிருந்துதான் இவரை தீரன் சின்னமலை என்று அழைப்பதாக கூறப்படுகிறது. இவர் மக்களுக்கு சேவை செய்வது மட்டுமின்றி பல்வேறு கோயில்களுக்கு கொடை வழங்குவது உள்ளிட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியச் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய ஒரு சில வீரத்திர மன்னர்களில் திரன் சின்னமலையும் ஒருவர். கேரளா மற்றும் சேலத்தின் எதிரிகளுடன் ஆங்கிலேயப் படைகள் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதில் பெரும் பங்கு வகித்ததுடன், மைசூர் அரசில் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்தார். இது அவரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய வரலாற்று மன்னராக ஆக்குகிறது.

திப்பு சுல்தானின் வெற்றிக்கு காரணமான கொங்கு படை..

இவரின் இந்த ஆங்கிலேயே எதிர்ப்பு குணம் பிடித்து போய் இவரோடு கைகோர்த்து போர் புரிகிறார் தீரன் சின்னமலை. குறிப்பாக கொங்குப்படையை சீரங்கப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றி நடந்த போர்களுக்கு வழிநடத்தி சென்று திப்பு சுல்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் தீரன் சின்னமலை. எதிர்பாரா விதமாக 1799ம் ஆண்டு திப்புசுல்தான் போரில் வீரமரணம் அடைய மீண்டும் கொங்குநாடு திரும்பி ஓடாநிலை கோட்டை கட்டி போருக்கு தயாராகினார் தீரன் சின்னமலை.

பிரஞ்சுப்படை உதவியோடு ஆயுதம் தயாரித்தல் மற்றும் கொங்கு படைவீரர்களுக்கு தொடர் பயிற்சி அளித்தல் போன்றவற்றை செய்து வந்தார் திப்பு. கோவை கோட்டையை முற்றுகையிட்டு அங்கிருந்த லெப்டினன்ட் கர்னல் கே.க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5ம் படையை அழிக்க திட்டமிட்டிருந்தார் தீரன். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த போரில் தோல்வியடைந்தார் தீரன் சின்னமலை.

வேற்றுமையில் ஒற்றுமை..

வேற்றுமையில் ஒற்றுமை..

சாதி, மதம் கடந்த ஒரு சில வரலாற்று மன்னர்களில் இவரும் ஒருவர் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. அனைத்து சமூகத்தை சேர்ந்த, அனைத்து மதத்தை சேர்ந்த வீரர்களும் இவரது படையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படைவீரர்கள் பலரும் தீரன் சின்னமலை படையில் முக்கிய பதவிகளில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

​தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை..

​தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை..

தீரன் சின்னமலையை போரால் ஜெயிக்க முடியாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர் படை அவரை கைது செய்து விசாரணை என்ற பெயரில் 1805ம் ஆண்டு தூக்கிலிட்டு கொன்றது. அவர் பிறந்திருந்தாலும் அவர் தூவி சென்ற வீர விதை இன்றும் ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் பரவி கிடப்பதை பார்க்க முடியும். பலரும் அரசியலுக்காக குறிப்பிட்ட சமூகத்தை கூறி தீரன் சின்னமலையை சொந்தம் கொண்டாடினாலும் அவர் என்னவோ ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும்தான் வாளெடுத்து போராடினார் என்பதே உண்மை.

அரச மரியாதை..

அரச மரியாதை..

இவரின் வீரத்தை பாராட்டி தமிழக அரசு இவருக்கு சென்னையில் ஒரு சிலையும், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அரசு கட்டிடங்கள் மற்றும் பகுதிகளும் இவர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இவரது ஓடாநிலை கோட்டை மற்றும் இவர் கொல்லப்பட்ட சங்ககிரி ஆகிய இடங்களில் அரசு சார்பில் இவருக்கு நினைவு மண்டபம் கட்டி நிர்வகித்து வருகிறது. இந்திய அரசு இவரின் தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read : https://tamilmorning.com/tamilnews/technology/redmi-smart-fire-tv/2023/

powered by www.octamact.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *