Without North Indians Business Cannot Be Run In Tamilnadu Says Balakrishnan | வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது பாலகிருஷ்ணன்

[ad_1]

வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழர்களும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள் என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  பாஜக ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பாஜக உள்ளது. அதானி  முறைகேடுகளில் நடந்ததா, இல்லையா என்பதை விசாரணை குழு நடத்தட்டும், அதுவரை பாராளுமன்றத்தில் சமர்பித்த பட்ஜெட்டை கூட விவாதிக்காமல் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கூட விசாரணைக் குழு அமைக்க முன்வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க முடியாத நிலை உள்ளது. சொத்து குவிப்பிற்கும், மோடிக்கும் தொடர்பு உள்ளது. அதானியும், மோடியும் கூட்டு களவானிகள் தான். 

மேலும் படிக்க | Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து… சென்னையில் பரபரப்பு!

அவசரகதியில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். 30 நாள் நீதிமன்றம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ஏன் அவசரமாக ராகுல் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை காரணமாக பெரும் பிரச்சினையாக உள்ளது. டெக்ஸ்டைல் தொழில் நகரமான கரூரில் குறைவான ஆர்டரே கிடைத்துள்ளதால் தொழில் முடங்கி கிடக்கிறது. சர்வாதிகார போக்கை நோக்கி மத்திய ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.  பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதனை நம் கட்சி வரவேற்றுள்ளது. நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் நிதி அமைச்சர் சொல்லும் கருத்து அவரது சொந்த கருத்தா அல்லது அரசின் கருத்தா என்பது தெரியவில்லை. அந்த மாதிரியான பொருளாதார கொள்கைகளை அமுல் படுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செயல்படுத்த வேண்டும்.

152 அரசாணையின் படி அவுட் சோர்சிங் முறையை மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியயத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். 10 ஆயிரம், 12 ஆயிரம் சம்பளத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும், அவுட் சோர்சிங் முறையை மாற்ற வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.    மின்சாரத்துறையில் உள்ள பிரச்சினைகளை உங்கள் ஊர் அமைச்சர் பேசி முடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். அது போல மற்ற துறை அமைச்சர்களும் பேசி தீர்வு காண வேண்டும். மற்ற விசயங்களை பாராட்டினாலும், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். அதிமுக திட்டங்கள் நிறுத்தப்படவில்லை, லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு நிவாரண திட்டமும் அனைவருக்கும் கொடுக்க தேவையில்லை. யாருக்கு தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்கு கொடுப்பது தான் நல்லது. குறைவான வருமானம் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் போது பார்க்கலாம்.  வடமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் தொழில் விஸ்தரிப்பால் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழகத்தை சார்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து இருக்கிறார்கள். அரசு வேலை கொடுக்கும் போது, தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | திருச்செந்தூர்-சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *