டாடா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சி ||TATA Electric Vehicle No:1

TATA Electric Vehicle: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியில் 50 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு 1 மில்லியன் யூனிட்கள் உற்பத்தியை கடந்த டாடா நிறுவனம் 2010 ஆம் ஆண்டு 2 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. 3 மில்லியன் என்ற இலக்கை 2015 ஆம் ஆண்டு கடந்த டாடா நிறுவனம் 4 மில்லியன் இலக்கை 2020 ஆம் ஆண்டு கடந்தது.தற்போது 5 ஆண்டுகள் அடையவேண்டிய 1 மில்லியன் இலக்கை வெறும் 2.5 ஆண்டுகளில் அடைந்து இந்தியாவில் 50 லட்சம் யூனிட்கள் உற்பத்தியை டாடா நிறுவனம் கடந்துவிட்டது. இத்தனைக்கும் இந்த 5 ஆண்டுகள் மிகவும் மோசமான கொரோனா காலகட்டம் ஆகும்

image 7

செமி கண்டக்டர் தட்டுப்பாடு, உற்பத்தி பாதிப்பு, கொரோனா தாக்கம் என் அனைத்தையும் சமாளித்து இந்த சாதனையை டாடா நிறுவனம் நிகழ்த்திக்காட்டியுள்ளது. சிறிய கார்கள் முதல் மிகப்பெரிய SUV கார்கள் வரை விற்பனை செய்யும் டாடா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் கார் சந்தையிலும் குதித்துள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமாக டாடா நிறுவனம் மாறியுள்ளது. அந்த நிறுவனத்தின் டாடா நெக்சோன் EV இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் காராக உள்ளது. இந்த சாதனை குறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் “50 லட்சம் கார்கள் உற்பத்தியை கொண்டாடுவதாக” தெரிவித்துள்ளது. மேலும் “இந்த சாதனையை நிகழ்த்த டாடா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும், மூலப்பொருள் விநியோகஸ்தர்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக” கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *